என் உயிரே என் பெலனே

bookmark

என் உயிரே என் பெலனே
என் உணர்வே என் இயேசுவே
எங்கெங்கும் எந்நாளும் இருப்பவரே
அக்கினி அபிஷேகம் அளிப்பவரே

மகிமை தேவ மகிமை
கிருபை எங்கும் கிருபை

1.கர்த்தர் உமக்கு நிகர் யாருமில்லை
உம் அன்புக்கு இணை ஏதும் இல்லை
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்  என் நேசரையே
பாடிடுவேன் பாடிடுவேன் என் இயேசுவையே - மகிமை

2.நேசரே எனக்கு சொந்தமானீர்
நீர் என்றும் எனக்கு துணையானீர்
வல்லவரே வல்லவரே  நீர் உயர்ந்தவரே
நல்லவரே நல்லவரே என் சிநேகிதரே - மகிமை

3.சேனையின் கர்த்தர் நீர் தானே
மகிமையின் ராஜா நீர் தானே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் என் கர்த்தரையே
போற்றுகிறேன் போற்றுகிறேன்  என் மீட்பரையே - மகிமை