என் இயேசு ராஜா சரோனின் ரோஜா
என் இயேசு ராஜா சரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும்
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிரபை முன் செல்ல அருளும்
கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா
கடலினை கண்டித்த கர்த்தர் நீர் அல்லோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும்
பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும்
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்
புரமனே என் முன் தீபமாய் வாரும்
ஏதிர் காற்றும் வீச எதிர்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
இயேசுவே யாத்திரையில் கரைசேர்க்கும் தேவன்
என் ஜீவ படகில் நங்கூரம் நீரே
