என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது

bookmark

என் வாழ்விலே குறைகள் என்பது ஏது? (2)

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே (2)
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா (2)

2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே (2)
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா (2)