என்னைக் காக்கவும் பரலோகம்
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழிநடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்
2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4. நலிந்தோரை நல்வாக்;கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
6. சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
புத்தியை தந்தீரே நன்றி ஐயா
7. புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்
8. வற்றாத நீரூற்றாய் ஓடச் செய்தீர்
வளமான தோட்டமாக மாற்றுகிறீர்
9. என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்
ஒரு நாளும் விலகாது என்றுரைத்தீர்
