என்னைக் கண்டவரே

bookmark

என்னைக் கண்டவரே  என்னைக் காண்பவரே
என்னைக் காத்தவரே  என்னைக் காப்பவரே

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

பாவியாக இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குதத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குருதி கொடுத்து விட்டீரே

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
மதில்களைத் தாண்டும்படி தூக்கி விட்டீரே
நெரிந்த நாணலைப்போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப் பிழம்பாய் மாற்றி விட்டீரே

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)