எத்துணை நன்று என்றும் பேரின்பம் இந்த நம் அவனியிலே

bookmark

அன்பு சமத்துவம் அமைதியில் நாம் கூடி வாழ்தலிலே (2)

1. கண்ணுக்கு கண் என்றும் பல்லுக்குப் பல் என்றும்
பகைமை மறந்திடுவோம்
நம் அயலாருக்கும் பகைவர் யாவர்க்கும்
அன்பினைப் பொழிந்திடுவோம் (2)
இப்படிச் செய்வதால் விண்ணகத் தந்தையின்
பிள்ளைகள் எனப்படுவோம் - நாம் (2)

2. பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும்
பெருமை அகற்றிடுவோம்
உழைப்பால் உயர்வோம் உள்ளதைப் பகிர்வோம்
உறவில் வாழ்ந்திடுவோம் (2) - இப்படி...