உயர்ந்த லட்சியம்

bookmark

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி - 2
  
1. தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனி
பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே

2. வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா
தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா - உன்
சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா.
   
3. இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம்
இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம்
ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம் - நம்
இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம்.