உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு

bookmark

உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு
உம்மைத் தவிர விருப்பம் எதுவுண்டு

ஆசையெல்லாம் நீர் தானையா
தேவையெல்லாம் நீர் தானையா
இரட்சகரே யேசு நாதா
தேவையெல்லாம் நீர் தானே

இதயம் கன்மலை நீர்தானையா
உரிய பங்கும் நீர்தானையா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )

உம்மோடு வாழ்வது என் பாக்கியம்
நீரே எனது உயிர் துடிப்பு
உமது விருப்பம் போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )
 
உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
(ஆசையெல்லாம் நீர் தானையா )