உமது வைராக்கியம் தாரும்

bookmark

உமது வைராக்கியம் தாரும்
உமது வைராக்கியம் தாரும் .. இயேசுவே
உம்மில் வைராக்கியம் தந்திடும்
 
தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா என் வாழ்விலே
தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா இன்றே என் வாழ்விலே
  
1. உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்!
உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே!
ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்!
உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே!
   
2. தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்!
ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே!
என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்!
தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே!