உன்னை காண்கிறார் - உன் கண்ணீர்

bookmark

உன்னை காண்கிறார் - உன்
கண்ணீர் துடைக்கின்றார்...இயேசு

நீ அழவேண்டாம்... ஆழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் - உன்னை
 
1.   நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்
நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்
 
2.   கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்
உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்
 
3.   எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
 
4.   உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள்
 
5.   கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்