உன்னதர் ஆவியின் பெலன்
உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும்
மண்ணின் ஈர்ப்பினை வென்றிட வேண்டும்
தூய்மையுடன் நான் வாழ்ந்திட வேண்டும்
பரலோகில் சேர்ந்திடும் காலம் வரை
1. வானத்து மன்னாவைப் பொழிந்திடும் நாளும்
கானக தாகத்தைத் தீர்க்கவே வாரும்
கோதுமை மணியாக மண்ணில் விழுந்து
பான பலியாக ஊற்றிடுவேனே!
2. அழைத்தவர் நீரே என் தகுதியும் நீரே
உமக்குள் நான் வல்ல போராயுதமே
புகுந்து செல்வேன் உம்பெலத்தோடே
திரும்பிடுவேன் உந்தன் ஜெயதொனியோடே
