உன்னதத்தின் ஆவியை

bookmark

உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
 
 
1.   பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே
சோர்ந்து போகும் எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்
 
 
2.   ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல்  மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும்
அன்பு கொண்டு வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே