இறைமக்களே கூடிவாருங்கள் உங்கள்

bookmark

இருகரமும் கூப்பி வாருங்கள் (2)
உறுதியான நம்பிக்கையில் இறையிடம் வரம் கேளுங்கள்
கேட்டதெல்லாம் கேட்டபடி கிடைத்ததென்று மகிழுங்கள்

1. கடுகளவு நம்பிக்கையால் கடலையுமே
கல்தரையாய்க் காயச்செய்யலாம்
அணு அளவு நம்பிக்கையால் இமயத்தையும்
ஆழ்கடலில் மூழ்கச் செய்யலாம்
உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது -2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய்

2. ஒருவார்த்தை சொன்னாலே போதுமையா
ஒருகுறையும் இல்லாமல் போகுமையா
உனதாடை விளிம்பை நான் தொட்டால் போதும்
ஓடிவிடும் உடனடியாய் இந்நோய் என்றார்
உன்னுடைய நம்பிக்கையே...