இருகரம் குவித்து சிரம்தனைத் தாழ்த்தி

bookmark

இதயத்தை எழுப்பி வணங்கிடுவோம் (2)
நம் இறைவனைத் துதித்திட வாரீர்
நம் இயேசுவைப் புகழ்ந்திட வாரீர் (2)

1. அனைவரும் ஓரினம் அனைவரும் ஓருடல்
அமைப்போம் புது உலகம் (2)
இறையாட்சி அமைந்திட அன்பு செழித்திட
மாட்சிமை கண்டிடுவோம் (2)

2. நாடுகளே நாம் நலமுடன் வாழ பாடுவோம் அமைதி கீதம் (2)
இங்கு போட்டிகள் நீங்கி வறுமைகள் அகல
நீட்டுவோம் அமைதிக்கரம் (2)