இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று
இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று
எல்லா நாவும் அறிக்கை செய்யட்டும்
1. தேவனின் ரூபமாயிருந்தும்
தம்மை தாமே வெறுமையாக்கினார்
அடிமைப் போல தன்னைத் தாழ்த்தினார்
அன்பினால் மனிதரின் சாயலானார்
2. மரணம் மட்டும் கீழ்ப்படிந்தார்
சிலுவை மட்டும் தன்னை த் தாழ்த்தினார்
ஆதலால் தேவன் அவரை உயர்த்தினார்
மேலான நாமம் அவருக்குத் தந்தார்
3. முழங்கால்கள் முடங்கட்டும்
முழக்கம் செய்யட்டுமே
விண்ணவர் மண்ணவர் கீழ் உலகோர்
இயேசுவே ஆண்டவர் என்று சொல்லட்டும்
