இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

bookmark

  1.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
   யாவையும் தாரளமாய்
   என்றும், அவரோடு தங்கி
   நம்பி நேசிப்பேன் மெய்யாய்

 ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்
 நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.

2.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
   அவர் பாதம் பணிந்தேன்
   லோக இன்பம் யாவும் விட்டேன்
  இன்றே ஏற்றுக் கொள்ளுமேன்.                    - ஒப்பு

3. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
   முற்றும் ஆட்கொண்டருளும்
   நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
   சாட்சியாம் தேவாவியும்.                            - ஒப்பு

4. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
   நாதா! அடியேனையும்
   அன்பு பெலத்தால் நிரப்பி
   என்னை ஆசீர்வதியும்.           - ஒப்பு