ஆயிரம் நாவுகள்

bookmark

ஆயிரம் நாவுகள் போதாதே
உம்மை துதிக்க உம்மை போற்றிட
பல நாமங்களால் நீர் போற்றப்படும்
எங்கள் யெகோவா தெய்வம் நீங்க

உம்மையே பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம்மையே பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
பாத்திரர் நீர் பாத்திரர்

1. தேவையெல்லாம் சந்தித்தீர்
எங்கள் யெகோவாயீரே
வெற்றிமேல் வெற்றிதந்தீர்
எங்கள் யெகோவா நிசியே - 2

2. சுகம் தந்து உயிர் கொடுத்தீர்
எங்கள் யெகோவா ரப்பா
சந்தோஷம் சமாதானம் தந்த
யெகோவா ஷாலோம் - 2