ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!
ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!
ஞானவான்கள் என்றார் .. இயேசு
ஞானவான்கள் என்றார்
1.பாவத்தில் வந்த சாபமெனும்
வேதனை சுமந்தலைவோர்
இயேசுவில் விடுதலை பெற்றக்கொள்ளும்
வழிதனை சொல்லிடுவோம் நாம்
2.உலகத்தார் செய்த பாவங்களை
இயேசுவோ எண்ணவில்லை
எல்லோரும் தன்னோடு நண்பர்களாய்
அன்போடு ஏற்றுக்கொண்டார்
3.அற்ப உலக செல்வத்தினால்
சிநேகிதர் சேர்த்திடுவோம்
நித்தியம் வந்தெட்டும் பொக்கிஷமாய்
பரத்தில் சேர்த்து வைப்போம்
