ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்

bookmark

ஏனெனில் அவர் நல்லவர்

1. என்றென்றும் உள்ளது அவர் இரக்கம் (2)
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்
என்று ஆண்டவருக்கு அஞ்சுவோர்
அனைவரும் சாற்றுவார்களாக
துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்
ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு
எனக்கு விடுதலை அளித்தார் - 2

2. ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்
எவன் எனக்கு என்ன செய்ய முடியும் ?
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்
சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன் - 2

3. மனிதன் மீது நம்பிக்கை வைப்பதைவிட
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்
தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதைவிட
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம் - 2