அருவிகள் ஆயிரமாய்

bookmark

1. அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
இருக்கிறேன்”என்றார்.

2. வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்,
குருசில் கூறும் இவ்வோரே
ஓலத்தில் அடங்கும்.

3. அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
என் ஆன்மாவும் ஒன்றே.