அமைதியில் உறவாடும் இறைவா

bookmark

உம் குரலினைக் கேட்கும் அமைதி தா (2)
பிறர் நலன் சிந்திக்கும் அமைதி தா
ஏதும் சிதைக்காத அமைதி எனக்குள் தா

1. இயற்கையில் வளர்வது அமைதியிலே
உள்ளொளி பிறப்பதும் அமைதியிலே (2)
உன்னத உயர்மொழி அமைதியன்றோ
உன்னதர் குரலும் அதுவன்றோ -2

2. தேடல்கள் விடைதரும் அமைதியிலே
நமை நாம் அறிவதும் அமைதியிலே (2)
உள்ளத்தில் நிறையும் அமைதியிலே
இறைவன் உரைப்பதை அறிவோமே -2