அதிசயங்களை எல்லா

bookmark

  1. அதிசயங்களை எல்லா
இடமும் செய்யும் கர்த்தாவை,
வாக்கினால் இருதயதிலேயும் துதியுங்கள்;
அவர் ஜென்மித்த நானே
முதல் இம்மட்டும்
இரக்கம் செய்தாரே.

2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
நற் சமா தானத்தால்,
மகிழ்ச்சியை அளித்து,
தயையை நம்முட
மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து, தீமையை
எல்லாம் விலக்கவும்.

3. உன்னதமாகிய
விண்மண்டலத்திலுள்ள
மாறாத உண்மையும்
தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும்
திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும்
துதி உண்டாகவும்