விவேகானந்தரின் பொன்மொழிகள் சில
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
* சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத் தான் இருக்கும்.
* கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
* உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா?
* செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
* வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவை தான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயத்துக்குள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத் தனம்.
* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
* சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
* எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
* நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
* இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
* இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
* வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
* சுயநலம் என்பதை அறவே தூர எறிந்து விட்டு வேலை செய்யுங்கள்.
* என் குழந்தைகளான நீங்கள் என்னை விட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
* கடமை அவ்வளவு இனிமையான ஒன்றல்ல; அன்பு என்னும் எண்ணெய் இடாமல் அதன் சக்கரங்கள் எளிதாகச் சுழலாது; மாறாக, தொடர்ந்து உராய்ந்த வண்ணமே இருக்கும். அன்பு இல்லாவிடில் பெற்றோர் குழந்தைகளுக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் தங்கள் கடமையை எவ்வாறு செய்ய இயலும்? நமது வாழ்வில் தினமும் சிறு சிறு பூசல்களாகிய உராய்வுகளை சந்திக்கவில்லையா? அன்பின் வழியாக மட்டுமே கடமை இனிமையனதாக இருக்க முடியும்.
* எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான காரியங்களைச் செய்வீர்கள். பயம் தோன்றினால் அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகிவிடுவீர்கள். பயமே உலகத் துன்பங்களுக்கு காரணம் மூட நம்பிக்கைகள் அனைத்திலும் கொடியது பயமே. இந்த பயம் தான் நம் துயரங்களுக்கு எல்லாம் காரணம். பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு அளிக்கவல்லது. எனவே 'எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! இலட்சியத்தை அடையும் வரையில் நிற்காதீர்கள்.'
* கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார் அதில் துணிச்சல் தென்படும், அதை நீ புரிந்துக்கொண்டால், துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும்.
* தன்னலமற்ற சமூக சேவையே உயர்ந்த தெய்வீகப் பணியாகும். நாம் ஒவ்வொருவரும் நம்மை சுற்றியுள்ள சமூகத்தில் துன்பப்படும் உயிர்களுக்கு நம்மால் இயன்ற அளவு சிறிது நேரத்தையும், சக்தியையும், பொருளுதவியையும் அளிக்க வேண்டும். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்கிற உயரிய விழிப்புணர்வு இந்த தேசத்திற்கு ஏற்பட வேண்டும்.
* உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
* நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.
* மனித வர
