விவேகானந்தரின் கடைசி தருணத்தில் நடந்த சம்பவங்கள் ஒரு பார்வை
நூறு துடிப்பான இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்று வீரமுழுக்கம் மிட்ட சுவாமி விவேகானந்தர் என்னும் ஞான தீபம் மறைந்த நாள் (4.7.1902)
அவர் வாழ்ந்த கடைசி தருணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் :-
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்துவிட்டார்
பூஜையறைக்குள் சென்று கதவுகளை தாளிட்டுக் கொண்டு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். அதன் பிறகு வெளிய வந்து சில நிமிடங்கள் உலாவினர் , வழக்கத்தை மீறி தன்னுடைய சிடர்களுடன் சேர்ந்தே உணவு அருந்தினார்.
'மாணவர்களுக்காக வேதக் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்'
'அப்படியே ஆகட்டும் சுவாமிஜி'
'சரி, நான் தியானத்துக்குப் போகிறேன்.'
தியானத்தை முடித்து விட்டு படுக்கையில் காலை நீட்டிப் படுத்தார். சீடரைக் கூப்பிட்டு விசிறும் படி கேட்டுக்கொண்டார்..
இரவு மணி 9 .00 ஆகிருந்தது....
உறங்கிகொண்டிருந்த விவேகானந்தரின் கைகள் நடுங்கின. இரண்டு முறை பெருமூச்சு விட்டார். அவ்வளவு தான் அதன் பிறகு மூச்சு வரவில்லை..
உலக அமைதிக்காகவும் ஆன்மிகத்தைப் பரப்புவதருக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்த விவேகானந்தர் என்கிற மலர் உதிர்ந்து விட்டது.....
