விலங்கு, தாவர மருத்துவம்
பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல" மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும்" உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
யானைக்கு வயா நோய்:
பெண் யானை கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோய் "வயா" எனப்படும். இந்நோய்க்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளது. - புறநானூறு. செய்.91 இல் அது காணக் கிடைக்கிறது.
யானைக்குக் கருச்சிதைவு:
கருவுற்ற யானையும் மூங்கிலின் முளையைத் தின்றால், அதன் கரு அழிந்துவிடும் என்று குறிப்பினால் உரைத்து" அம்மூங்கில் பெண்களுக்கும் கொடுத்தால் என்னவாகும் என்பதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுவதைப் போல, "கருச்சிதைவிற்கு மூங்கில் முளை" என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
எள்ளின் "மகுளி" நோய்:
தாவரங்களிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய்களில் எள்ளின் பயன்பாடு, சங்க காலத்திலிருந்து இன்றுவரை சிறந்த இடத்தைப் பெறுகிறது. (எள்+நெய்=எண்ணெய்) எள்ளின் பயனைக் கருத்திற் கொண்டு எள்ளிற்கும் மருத்துவம் காணப்பட்டது. எள்ளிற்கு வரும் நோய் "மகுளி" என்றும், அவ்வாறு நோயுற்ற எள்ளின் சுவை கைப்புச் சுவை கொண்டதாக இருக்கு மென்றும் உரைக்கப்படுகிறது.
