திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி

bookmark

"திரிகடுகம்" என்பது சுக்கு, மிளகு" திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டுப் பெயராகும். இம்மருந்து மூன்று மருந்துகளைக் கொண்டிருப்பதைப் போல" இந்நூலின் செய்யுள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்களைக் கூறி ஓர் அறநெறியை வலியுறுத்திக் கூறுவது போல் அமையும்.

சிறுபஞ்சமூலம்:

"சிறுபஞ்சமூலம்" என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி" பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமையும்.

ஏலாதி:

"ஏலாதி" என்பது ஏலம், இலவங்கம்" சிறுநாகப்பூ, மிளகு" திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும். இதன் பாடல்கள் ஆறு கருத்துகளைக் கொண்டு ஒரு நெறியை உணர்த்துவதாக அமையும்.

மேற்கண்ட இம்மூன்று கூட்டு மருந்துகளும் சிறப்புடன் போற்றப்படுகின்ற மருந்துகளாக தமிழ் மருத்துவத்தில் இடம் பெறுவதாகும். இம்மருந்துகள் சித்த மருத்துவம்" ஆயுர் வேதம் என்னும் இரண்டு மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இம்மருந்தின் தோற்றம்" பழந்தமிழர் மருத்துவ முறை என்பது உணரத்தக்கதாகும்.

மேற்கண்ட இவையெல்லாம், இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளாகும்.