விசயால சோழன் (கி.பி.850-871)

bookmark


கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்.