விசயநகர கால ஓவியங்கள்
விஜய நகரப் பேரரசு காலத்திலும் ஓவியக்கலை தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. காஞ்சி கைலாச நாதர் கோவிலிலுள்ள ஓவியங்களைச் செப்பனிட்டதுடன், காஞ்சி வரதராஜபெருமாள் கோயில், திருப்பருத்திக் குன்றம் சந்திரபிரபா கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவெள்ளறை புண்டரீகபெருமாள் கோயில், ஆகிய இடங்களிலும் ஓவியங்களை விஜயநகர அரசர்கள் வரைவித்தனர்.
