வானிலை ஆராய்ச்சி நிலையம்

bookmark

1. "தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததுல இருந்து டார்ச்சர் தாங்க முடியலை..." 

"என்ன பண்றார்?"

"லெட்டர்பேடுக்குப் பதிலா பிரிஸ்கிரிப்ஷனோடவே அலையறார்!"

கே.சேகர்

2. "லேடி கான்ஸ்டபிள்கிட்ட கபாலி வந்து என்னய்யா கேட்டானாம்....?"

"கண்களால் கைது செய்யமுடியுமான்னு கேட்டிருக்கான் சார்!"

பெ.பாண்டியன்

3. "நேத்து வீட்டுக்கு லேட்டா போனேன்னு என் மனைவி ரொம்ப கோவிச்சுக்கிட்டா...."

"அப்புறம் எப்படி சமாதானப்படுத்தினீங்க?"

"நான் எங்க சமாதானப்படுத்தினேன்.... என்னை அடிச்சு அவளே அவளை சமாதானப்படுத்திக்கிட்டா!"

எஸ்.எஸ்.பூங்கதிர்

4. "அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி வானிலை ஆராய்ச்சி நிலையத்துல வேலை பார்த்தாரா...?"

"எதுக்கு கேக்கறீங்க?"

"பின்னே... எனக்கு அடுத்த 24 மணி நேரத்துல ஜலதோஷத்துடன் கூடிய இருமல் வரும்னு சொல்றாரே!"