பிரேக் அடிச்சே வண்டி நிக்கல

bookmark

1. கண்டக்டர்: "யோவ் என்னயா நான் விசில் அடிச்சும் வண்டி நிக்காம போகுது?" 

டிரைவர்: "அட போயா! நான் பிரேக் அடிச்சே வண்டி நிக்கல; நீ விசில் அடிச்சா நிக்கப் போகுது!"

கோமதி

2. "மழை வேண்டி தவளைக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு தலைவர்..."

"அதுக்கு ஏன் ஜனங்க அவரைத் திட்டறாங்க...?"

"மொய் வசூல் பண்ணிட்டு வந்துட்டாராம்ல.... அதான்!"

எஸ்.சக்தி

3. "2011ல நான்தான் பிரதமர்ங்கறாரே தலைவர்.... தெரியாம பேசறாரா?"

"ம்ஹும்.... தெளியாம பேசறாரு!"

தாமு

4. "பாதி ஆபரேஷன்லயே டாக்டர் வெளியில போறாரே.... ஏன்?"

"பேராடிச்சா இப்படித்தான் வெளியே போய் "தம்" அடிச்சிட்டு வருவாரு!"

பா.து.பிரகாஷ்

5. "உங்க கணவருக்கு தலையில ஆபரேஷன் பண்ணா, எல்லாம் மறந்துடும்... பரவாயில்லையா?"

"பரவாயில்லை டாக்டர்... ஆனா சமையல் பண்றது மட்டும் ஞாபகம் இருக்கறா மாதிரி பண்ணுங்களேன்!"