மோப்ப நாய்
1. "இவருக்கு பலமா அடிபட்டிருக்கே, எப்படி?"
"பஸ்ல படம் போட்டேன். பாட்டு சீன் வந்தப்ப பழக்க தோஷத்துல எழுந்து சிகரெட் பிடிக்க வெளியில போயிட்டார்!"
திருஞான சம்பத்குமார்
2. "துணி துவைக்கும் போது உன் பொண்டாட்டி பேரை எதுக்கு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கே...?"
"அப்போதான் நல்லா அடிச்சி துவைக்க முடியுது...!"
பீ.என்.நரசிம்மமூர்த்தி
3. "ஏட்டய்யா . . . . ஆனாலும் உங்க மோப்ப நாய் ரொம்ப மோசம்!"
"என்னாச்சு கபாலி..?"
"நான் திருடப் போற வீட்ல எனக்கு முன்னாடியே போய் நின்னுக்கிட்டு, வாலாட்டி வரவேற்குது!"
பா.து.பிரகாஷ்
4. "ஊர்ல அநியாயம் அதிகமாயிடுச்சு இன்ஸ்பெக்டர்.."
"ஏன்... என்னாச்சு?"
"நான் சொந்த வீட்ல குடியிருக்கேன். ஆனா எவனோ ஒருத்தன் மாசாமாசம் என்னை மிரட்டி வாடகை வாங்கிக்கிட்டுப் போறான்...!"
