அழகு ஆபத்தானது!

bookmark

1. "அழகு எப்பவுமே ஆபத்தானதுன்னு இப்பதான் புரியுது டாக்டர்..." 

"எப்படிச் சொல்றீங்க...?"

"நர்ஸ் நமீதாவை நைஸா பேச வச்சே, என்னை ஆபரேஷனுக்கு சம்மதிக்க வச்சிட்டீங்களே!"


2. அவர்: சார் என் பொண்டாட்டியை காணோம்...

போஸ்ட் மாஸ்டர்: அதுக்கு போலீஸ் ஸ்டேஷனுகில்லே போகணும். போஸ்ட் ஆபீசுக்கு வந்திருக்கீங்க?

அவர்: ஐயோ சந்தோஷத்துல எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. ஸாரி!

3. "டாக்டர்... அந்த எட்டாம் நம்பர் பேஷன்ட் உங்களை கிண்டல் பண்ணி சிரிச்சுக்கிட்டே இருக்காரு...!"

"அவருக்கு உடனே ஆபரேஷன்னு சொல்லும்மா...!"

4. "படிப்புல தலைவர் வீக்கா இருக்கலாம்... அதுக்காக இப்படியா பயப்படுறது...?"

"என்னாச்சு?"

"பிளட் டெஸ்ட்ன்னு டாக்டர் சொன்னதும், பயத்துல ஓடி வந்துட்டாரு!"