மிதிலைக் காட்சிப் படலம் - 709
709.
‘கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா.
உள்ள உள்ள உயிரைத் துருவிட.
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ?
கொள்ளை கொள்ள - (உலக முழுவதையும்) கொள்ளை
கொள்வதற்கு; கொதித்து எழு - பொங்கி எழுகின்ற; பாற்கடல்
பள்ளம் - ஆழமான பாற்கடலினது; வெள்ளம் என - வெள்ளம்
போல; படரும் நிலா - பரவியுள்ள நிலாவானது; உள்ள உள்ள -
நான் (அந்த நங்கையை) நினைப்பதனால் தரித்துள்ள; உயிரை -
என் உயிரை; துருவிட - அரிப்பதால்; வெள்ளை வண்ணம் -
வெண்மை நிறமுள்ள; விடமும் - ஒரு நஞ்சும்; உண்டாம் கொல் -
லகில் உள்ளதோ?
கொள்ளை கொள்ளுதல்: ஒருங்கே கவர்ந்து தன்வசமாக்குதல். நஞ்சு
கரிய நிறமுடையது என்று கூறுவது மரபு. ஆனால். நிலா என்னும்
வெள்ளை நிறமுடைய விடம் காணப்படுகிறதே! என்று காதல்
நோயால் வருந்தும் இராமன் தன்னை வருத்துகின்ற நிலாவைப்
பழித்து கூறுகின்றான். கொள்ளை கொள்ளக் கொதித்தெழு நிலா:
எனது உயிரை நானும் அறியாமல் கவர்ந்து செல்வதற்குச் சீறியெழும்
நிலா என்றும் உரைக்கலாம். 146
