மிதிலைக் காட்சிப் படலம் - 699
தேவர்கள் தம்மிடஞ் சார்தல்
699.
‘அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்.
சென்னி தாழ்த்து. இரு செங்கை மலர் குவித்து.
“உன்னு நல் வினை உற்றது” என்று ஓங்கினான்.
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார்.
அன்ன வாசகம் - (பெருந்தேவர்களின்) அந்த வார்த்தைகளை;
கேட்டு உணர் - செவிகளில் கேட்டு அறிந்த; அந்தணன் - கௌசிக
முனிவன்; சென்னி தாழ்ந்து - தலைவணங்கி; இரு செங்கமலம்
குவித்து - தாமரை போன்ற இரு கைகளையும் கூப்பி; உன்னும்
நல்வினை - யாவராலும் கருதப்படுகின்ற நல்ல தவப்பயன்; உற்றது -
(எனக்கு வந்து) பொருந்தியது; என்று ஓங்கினான் - என்று
பூரிப்படைந்தான்; துன்னு தேவர் - (பின்பு) அங்கு வந்து சேர்ந்த
தேவர்களும்; தம் சூழலுள் - தத்தம் இடத்திற்கு; போயினார் -
சென்றார்கள். 136
