மாநாடு
"குடிமகன்கள் எல்லாம் தலைவர் பின்னாடி சுத்திக்கிட்டிருக்காங்களே... எதுக்கு?"
"தலைவர்கிட்டே சரக்கு இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பாங்க!"
"அவருக்கு ஒரு விபரமும் தெரியலடி"
"எப்படிச் சொல்ற...?"
"அமாவாசை அன்னிக்குத் தேன்நிலவுக்குப் போகலாமான்னு கேட்கிறார்."
"டாக்டரோட வீட்டில முன்னாடி வேலை பார்த்தேன்னு சொல்றீங்களே...? சர்ட்டிபிகேட் ஏதுமிருக்கா?"
"அவரோட ஸ்டெதஸ்கோப்பே இருக்கு சார்!!"
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
"அரசியலுக்கு வந்தாலும் அந்த நடிகருக்குத் தொழில் புத்தி போகவே இல்லே!"
"எப்படிச் சொல்றே?"
"நல்ல லொகேஷனாப் பார்த்து, நிறையத் துணை நடிகர்களைத் திரட்டி மாநாடு நடத்தப் போறதா சொல்றார்."
