பட்ஜெட்
மனைவி: புதுச்செருப்பை பீரோவில வச்சுப் பூட்டுறீங்களே...ஏன்?
கணவன்: புதுச்செருப்பு கடிக்குமுன்னு சொன்னாங்க... பழசாகட்டுமுன்னு பீரோவில வச்சேன்.
"அந்த எம்.எல்.ஏக்கு ஒரு விபரமும் புரியல்லேன்னு எப்படிச் சொல்றே?"
"பட்ஜெட்ல துண்டு விழுந்திருச்சின்னு சொன்னா எனக்கொரு துண்டு கொடுங்கன்னு நிதி மந்திரிக்கிட்டே போய்க் கேக்குறாரு!"
"சாதி ஒழிப்பு மாநாடு நடத்துறது பற்றிய ஆலோசனைக் கூட்டத்திலே என்ன தகராறு?"
"எந்தச் சாதிக்காரர் தலைமை தாங்கிறதுங்கிறதிலேயாம்!"
"எட்டிப் பார்த்ததுக்காகவா உன்னைப் பரீட்சை எழுத விடல்லே."
"ஆமா, எனக்கு முன்னால பரீட்சை எழுதினவன் பேப்பரைப் பார்த்து எழுதினேன்!"
அமைச்சர்: உங்க ஊருக்கு உடனே பஸ் விடப்படும்.
ஒருவர்: ரோடே இல்லீங்களே?
அமைச்சர்: ஹெலிகாப்டர் ஏற்பாடு பண்றேன்.
