தைல டப்பா
"கல்யாண வயசில பொண்ணு இருக்கு... கவலைப்படாம இருக்கீங்களே...?"
"நம்ம தெருப்பசங்கதான் பத்திரமா கூப்பிட்டுப் போய் பத்திரமா கூப்பிட்டு வர்றாங்களே...!"
"என்னதான் நீங்க சென்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பணும்..."
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிக்கிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு 'நீளம்' தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
"ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை....."
"அய்யய்யோ.... அப்புறம் என்ன பண்ணுனீங்க?.."
"அப்புறம் பாக்கெட் -ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்...."
"எதுக்காக தைல டப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க...?"
"டாக்டர்தான் தலைவலிக்கு இதைத் தடவச் சொன்னார்."
