பைனாகுலர்

bookmark

ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....

தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?

ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டயிருந்து கடன் வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்.

தலைமை ஆசிரியர் : ?!?!

"அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!" 

"முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?" 

"உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போதுகூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்."

நோயாளி : டாக்டர், உங்கக்கிட்ட ஆபரேஷன் பண்ணிக்கிட்டுப் போனதிலிருந்து, வயித்துக்குள்ள கத்தியால குத்துற மாதிரி வலி எடுக்குது. 

டாக்டர் : ஒரு வாரமா கத்தரிக்கோலை எங்கெல்லாமோ தேடிக்கிட்டிருந்தேன்! அது உன் வயித்துக்குள்ளேதான் இருக்கா?

ஜக்கு : என்னடா மக்கு கைல பைனாகுலர் வச்சிருக்க? 

மக்கு : ஆமாம், நான் என் 'தூரத்து' சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்.

ஒருத்தி : எங்க வீட்டுக்காரருக்கு வர வர ஞாபகமறதி ரொம்ப அதிகமாயிடிச்சிடீ...

மற்றவள் : எப்படி சொல்றே.

அவள் : நேத்து என்னோட புடவையைத் துவைக்கிறதுக்கு பதிலா வேலைக்காரியோட புடவையைத் துவைச்சிப் போட்டிருக்காருன்னா பாரேன்.