ஐசிஐசிஐ
கணவன்: கன்னத்திலே குழி விழுந்தா ரொம்ப அதிர்ஷ்டமாமே...
மனைவி: நாசமாப் போச்சு. அதுக்குன்னு இப்படியா பீடியை ஊதித் தள்ளறது.
ஒரு ஆசிரியர் மாணவனின் தந்தையிடம்: 'சார் உங்க பையன் ரொம்ப கெட்டுப் போயிட்டான். நேத்து நான் பார்க்கும்படியா சிகரெட் பிடிச்சிக்கிட்டிருக்கான். நீங்க கேட்கக் கூடாதா?
மாணவனின் தந்தை: நானே எப்படி சார் அவன்கிட்டே சிகரெட் கேட்கறது; என்னுடைய மரியாதை என்னத்துக்கு ஆகும்.
"ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியலையே..."
"தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்..."
ஒருவர்: சார்! மாணிக்கம் தெரு எங்க இருக்கு?
மற்றொருவர்: சூரியன் மறையற திசையில இப்படியே போங்க வரும்.
ஒருவர்: சூரியன் எந்த திசையில மறையுது?
மற்றொருவர்: தம்பி நானும் ஊருக்கு புதுசுதான்.
தலைவர்: என்ன நம்ம வீட்டுக்குள தொண்டர்களோட கூச்சல் கேட்குது அவங்க எங்க இங்க வந்தாங்க?
செயலாளர்: 'நான் உங்களுடனேயே இருப்பேன்'னு நீங்க விட்ட அறிக்கையை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல இருக்கு.
