டெஸ்ட் மேட்ச்
"ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு?"
"கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!
பிளேயர் நடுவரிடம்: என்ன சார் இது பாதி ஆட்டத்திலேயே பைல்களை எடுத்துட்டுப்போறீங்க நாங்க 75 ரன்தான் அடிச்சிருக்கோம்...
நடுவர்: 50 ஓவர் முடிஞ்சு போச்சு தெரியலையா?
பிளேயர்: அப்ப இது டெஸ்ட் மேட்ச் இல்லையா?
நடுவர்: நீங்க என்ன டிரஸ் போட்ருக்கீங்கன்னு கொஞ்சம் குனிஞ்சு பாருங்க!
பிளேயர்: இந்த பாழாய்ப்போன மறதியால மேட்சையே கோட்டை விட்டுட்டோம்.
"எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . ."
"இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?"
"நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க."
வகுப்பறையில் இரு மாணவர்கள்
ஒருவன்: போடா முட்டாள்....
மற்றொருவன்: நானாடா முட்டாள்..? நீதான்டா முட்டாள்...
ஆசிரியர்: நான் ஒருத்தன் இங்க இருக்கேன்றதையே மறந்துட்டீங்களாடா...?
மனைவி: போதை ஏறிடுச்சுன்னா அதுக்காக இப்படியா?
கணவன்: ஏன்... அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்?
மனைவி: உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.
