பேயென்றால் இப்படித் தான் இருக்கும்
கண்கள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்து இருந்தது அவனுடைய பற்கள் எல்லாம் நீளமாக இருந்தது அவனுடைய கன்னங்களில் இருந்து ரத்தம் ஓழுகும் கீறல்கள் இருந்தன.
நெற்றியில் மிகப்பெரிய தீக் காயம் அந்த உருவத்தை பார்த்த மாத்திரத்தில் எனக்கு பேச்சு வரவில்லை என் உயிர் இவனிடம் சிக்கி கொண்டது என்று பயத்தில் எனக்கு வியர்த்து கொட்டியது கால் இரண்டும் நடுங்கியது அவன் எந்த விதமான சத்தத்தையும் எழுப்ப வில்லை அவன் என்னை கடந்து அந்த நாற்காலி அருகில் சென்றான்
அந்த நாற்காலியில் கூடையை காணாமல் அவன் வானம் அதிர கத்தினான் நாலாபுறமும் கண்களை நோட்டமிட்டு மீண்டும் வீடே இடிந்து விழும் அளவுக்கு கத்தினான் நான் அச்சத்தில் கீழே உட்கார்ந்து அவனை பார்க்காமல் சுவர் பக்கமாக திரும்பி கொண்டேன்.
உதடுகள் துடிக்க கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.இந்தப் பேய் என்னை சாப்பிட்டு விடுவானா என்பது தான் அப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.
