புல்லாங்குழல்
"காது கேட்கலன்னுதானே சொன்னீங்க... கண்ணாடி போட்டுட்டு வர்றீங்க...?"
"தெரியாத்தனமா கண் டாக்டர்கிட்ட போயிட்டேன்."
ஒருவர்: "தலைவர் தன் கைகள் கறை படாதவைங்கறதை எப்படிக் காட்டறார் பாருங்க.!"
மற்றவர்: "எப்படி?"
ஒருவர்: "இங்க் கறை படிந்த தன் கைகளை கஷ்டப்பட்டுக் கறை இல்லாமே கழுவியிருக்கிறார் பாருங்களேன்."
"கல்யாண வீட்டில பத்திரிகையை வைத்துக்கொண்டு யாரைத் தேடிக்கிட்டிருக்கீங்க...?"
"இந்தக் கல்யாணப் பத்திரிகையில தங்கள் நல்வரவை விரும்பும்...ன்னு நாற்பது பேரைப் போட்டிருக்காங்களே... அவங்களத்தான் தேடிக்கிட்டிருக்கேன்."
"கறுப்பு மை கேட்டு கடைகடையா அலையறீங்களே...ஏன்?"
"விண்ணப்பத்தை பிளாக் லெட்டரில்தான் எழுதணும்னு போட்டிருக்கே...!"
"புல்லாங்குழல் வாங்கப் போயிட்டு திரும்ப வந்துட்டீங்களே...ஏன்?"
"முழுவதும் ஓட்டையா இருக்கிறதக் கொடுத்தான் வேணாமுன்னு வந்துட்டேன்."
