எடை மிசின்
நோயாளி: "இருமல் நிற்க மாட்டேங்குதுங்க...?"
டாக்டர்: "அப்படின்னா அங்க உட்கார வையுங்க...! இல்ல படுக்க வையுங்க...!"
"இரண்டு காளை மாடுகள் வாங்க கடன் வாங்கினீங்களே... ஏன் திரும்பக் கட்டலை?"
"கன்று போடுமின்னு நினைச்சேன். இன்னும் போடலீங்க...!"
"டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானே... இதையேன் பெரிசா சொல்றீங்க...?"
"அட! நீங்க ஒன்னு கரண்ட் இல்லைன்னாலும் டி.வியைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க.!"
"எடை மிசினில் ஏறி செருப்பைக் கையில் வச்சுக்கிட்டு எடை பார்க்கிறீங்களே...ஏன்?"
"செருப்பைக் கழற்றிவிட்டு எடை பார்க்கணும்னு போட்டிருக்காங்களே...!"
ஒருவன்: "உனக்கு கவர்ன்மெண்ட் வேலை வாங்கிட்டியாமே?"
மற்றவன்: "ஆமாண்டா...!"
ஒருவன்: "என்ன விலைக்கு வாங்கின?"
