தொகுதி ஒதுக்கீடு
பையன்: "அய். நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே இருக்கீங்க."
பொண்ணு: "உங்க வைஃப் பேரு என்ன?"
பையன்: "எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல."
"63 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே..."
"மொத்தம் கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே.. ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு...."
ஒருவன்: "அந்த ஆளு ரொம்ப அப்பாவியா இருக்காரே."
மற்றவன்: "எப்படி சொல்றே?"
ஒருவன்: "பேப்பர் மசாலாவுக்கு வருட சந்தா கட்ட முடியுமான்னு கேக்கறாரு!!"
"தலைவர் டெல்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்..."
"அவங்க சொல்றதெல்லாம் புரியாம.. மௌனமாகவே இருந்திருக்கார்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு.. பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க..."
"சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே..."
"இரண்டாவது யார்..?"
