புதுமை வள்ளலே புனித அந்தோனியாரே - உம்

bookmark

புதுமை வள்ளலே புனித அந்தோனியாரே - உம்
புகழ்பாடும் பக்தர் குரல் கேட்டிடுவாயே
எந்தன் குறைகள் எல்லாம் போக்கிடுவாயே (2)

1. ஐயா உன் ஆலயம் அருள் வேண்டி வந்தோம்
அருள்வீசும் திருமுகத்தைக் கண் குளிரக் கண்டோம் (2)
பாரும் எங்கள் நெஞ்சமே உம்மிடமே தஞ்சமே - 2
தேடும் உள்ள அமைதிதனைத் தந்திடுவாய் ஐயனே - 2

2. மெய்வாசல் விளக்கேற்றி கரம்கூப்பி நின்றோம்
பொய்யாவும் தீச்செயல்கள் சன்னிதியில் கண்டோம் (2)
எரியும் மெழுகுதிரியிலே வெள்ளி மேசைப் பொருளிலே - 2
எம் இதய எண்ணங்களைக் காணிக்கையாய்த் தந்தோம் - 2