விளதை வினோதரே புனித அந்தோனியாரே
விளதை வினோதரே புனித அந்தோனியாரே
வரம் பல அருளும் கோடி அற்புதரே -2
வாழ்க வாழ்க இறை அருள்மிகு போதகரே
வாழ்க வாழ்க எங்கள் வியத்தகு காவலரே
1. விண்ணக வாழ்வின் படிப்பினையே - மறை
உண்மையை உரைத்தவரே (2)
புண்ணியம் எனும் ஞான வெள்ளாண்மையை
எங்கும் விளைவித்த மாமுனியே (2)
2. திருச்சிலுவை மிக நேசித்தவரே என்றும்
தூய்மையின் லீலி மலரே (2)
தவறுவோர் வாழ்வின் ஒளிவிளக்கே பக்தர்
துயரினைத் துடைப்பவரே (2)
பீஏ ஹக்ஷீஸயூ]மசுடி
