பார்த்தும் பார்க்காத...

bookmark

நண்பர் ஒருவர் பல் டாக்டரைச் சந்தித்தார். "என் கடைவாய்ப் பல் லேசாக வலிக்கிறது" என்றார்.

"மருத்துவ மனைக்கு வாருங்கள்" என்ற டாக்டர் வந்தவுடன் அவர் கடைவாய்ப் பல்லை எடுத்து விட்டார்.

சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் டாக்டரை வழியில் சந்தித்த அவர், "என் முன் பல் இரண்டும் ஆடுகின்றன" என்றார்.

டாக்டர் அந்த பற்களையும் எடுத்து விட்டார்.

அடுத்த முறை டாக்டரைச் சந்தித்த போது அந்த நண்பர் ஓட ஆரம்பித்தார்.

ஆனால் டாக்டரோ அவரைத் தடுத்தி நிறுத்தி, "எதற்காக என்னைக் கண்டதும் ஓடுகிறீர்" என்று கேட்டார்.

"இப்பொழுது பல் வலிக்க வில்லை. தலையை வலிக்கிறது அதனால்தான்" என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தார்.