பாதரசம்

bookmark

"நம்ம தலைவருக்கு ஏன் தான் டாக்டர் பட்டம் கொடுத்தோம்னு வருத்தப்படறாங்களாமே... ஏன்?"

"டாக்டர் பட்டம் கொடுத்தீங்க, சரி... ஆஸ்பத்திரி எப்ப கட்டித் தருவீங்கன்னு கேக்கறாராம்...!"

"பொண்ணோட அப்பா பெரிய விஞ்ஞானியாமே..."

"இருக்கட்டுமே.... அதுக்காக கல்யாணச் சாப்பாட்டுல 'மிளகு ரச'த்துக்குப் பதிலா 'பாதரசம்' ஊத்துறது நல்லாவா இருக்கு...?"

"பொண்ணை பார்த்துட்டு, ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு உன்னை அடிச்சிட்டாங்களா...?"

"ஆமாம்... தெரியாம அவ புருஷன்கிட்ட சொல்லிட்டேன்!"

"நீங்க எடுக்கறது குடும்ப சண்டைப் படம்னு சொல்றீங்களே...?"

"ஆமாம்! அப்பா, அம்மா, பிள்ளைங்க பொண்ணுங்க எல்லாரும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுக்கறதா கதையை அமைச்சிருக்கோம்.!"

"தலைவர் எதுக்கு சிறைச் சாலைக்குப் போயிருக்கார்...?"

"நம்ம கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கவாம்....!"