நோய்நொடி நீக்க வல்லவரே எம்

bookmark

நோய்நொடி நீக்க வல்லவரே எம்
பார்புகழ் புனித செபஸ்தியாரே
வேதத்திற்காய் உயிர் தந்தவரே
யாவர்க்கும் அருள்வரம் தருபவரே -2

1. போற்றிப் புகழ்ந்து பாடிடுவோம் நம் புனிதன் பெருமைகளை -2
இறையாட்சி மண்ணில் மலர தன்னையே தந்தவராம் - நம்
இறைஇயேசு உரைத்த நல்வழியில் என்றுமே வாழ்ந்தவராம் (2)
இறைஞ்சுவோர்க்கிரங்கி இறைவனை வேண்டி

2. நிறைவரம் தருபவராம் அவர் புகழினைப் பாடிடுவோம் -2
உயர்ந்த குலத்தில் பிறந்து வளர்ந்த கோமகனாம் - எம்
பாவை நகர் வீற்றிருக்கும் பாதுகாவலராம் (2)
வைசூரி அம்மை வாந்தி பேதி நீங்கிடச் செய்பவராம் அவர்