நாட்டுப் படலம் - 76

bookmark

‘இகலுவ‘ இவை எனல்

76.

பகலினொடு இகலுவ, படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ, நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ, சுதை புரை நுரை; கார்
முகலினொடு இகலுவ, கடி மண முரசம்.
 
படர்மணி-பரவிக் கிடக்கின்ற மணிகள்; பகலினொடு இகலுவ- சூரிய
ஒளியுடன்  மாறு  கொண்டொளிர்வன;  நளிவளர்  இளநீர்- குளிர்ந்த
இளநீர்கள்; மடவார் நகிலினொடு இகலுவ- பெண்களின் தனங்களோடு
மாறுபட்டு விளங்குவனவாம்

அந்நகர     மாதர்  அணியும்  அணிகலன்களில்      பதித்துள்ள
இரத்தினங்கள்  சூரியன் ஒளியை விட மிக்கு விளங்குவன.   அவர் தம்
முலைகள்  செவ்விளநீர்களை  விட  வடிவத்தால் திரட்சியால்   சிறந்து
விளங்குவன.  அவர்கள்  அணியும் நூலாடைகள்   பால் நுரையை விட
மெல்லியனவாக நொய்யனவாக விளங்குவன.   மணமுரசு ஒலியோ மழை
மேகத்தின்   குமுறு   குரலினும்   மிக்கு    விளங்குவது.  மாறுபடல்-
போட்டியிட்டும் தோல்வி காணுதல், நளி-பெருமை, செறிவு.         45